அசைவில்லா உம்
ராஜ்யத்தை
ஆவலோடு எதிர்பார்க்கின்றேன்
அனுதினமும் நான்
வாழ்ந்திடுவேன்
ஆசையோடு நான்
காத்திருப்பேன்
பரலோக
தேசம், அது மேலான
தேசம்
நித்திய
வீடு, அழியாத நகரம்
புதிய எருசலேம்
பரிசுத்த
நகரம்
எனக்காய் இறங்கி
வந்திடுமே
இப்பூவில் அதுவரை
பரதேசியாக
வாழ்ந்து அதை
நான் சுதந்தரிப்பேன்
– பரலோக
என்பிதா வீட்டில்
அனேக வாசஸ்தலம்
எனக்காய் ஆயத்தமாகிடுதே
கறைதிரையில்லாத கற்புள்ள
கன்னிகையாய்
பரிசுத்தத்தோடு நான்
பிரவேசிப்பேன்
– பரலோக
சீக்கிரமாய் நான்
வருவேன் என்றீர்
ஆமென் இயேசுவே
நீர் வந்திடும்
கடைசி எக்காள
சத்தத்தைக்
கேட்க
ஆவலாய் நானும்
காத்திருப்பேன்
– பரலோக