ஆவிக்குள்ளாகணுமே

உந்தன் ஆவியால் நிரம்பணுமே

உலகத்தை மறக்கணுமே

உம்மில் நானென்றும் மகிழணுமே

 

 

பரலோக தரிசனம் பரனே நான் காணணும்

பரிசுத்தரே உம்மைநான் தரிசிக்கணும் (2)                             

இடிமுழக்க சத்தம் கேட்கணும்

உம்மையே நானென்றும் பணிந்திடணும்

தந்தனானா தந்தனானா தந்தனானே தந்தனானா

               - ஆவிக்குள்ளாகணுமே

 

 

நீச்சாள அனுபவம் எனக்கு தாரும்

உம்சித்தம் போலென்னை நடத்திடணும்

உள்ளங்கை மேகம் பெருமழை பெய்யணும்

உம்மிலே மகிழ்ந்து நான் மிதக்கணும்

தந்தனானா தந்தனானா, தந்தனானே தந்தனானா

               - ஆவிக்குள்ளாகணுமே

 

 

எக்காள சத்தத்தை என்செவி கேட்கணும்

அக்கினி இரதத்தின்மேல் நான் செல்லணும்

நித்திய வீட்டில் நான் நிரந்தரம் தங்கணும்

நேசரின் மார்பினில் மகிழணும்

தந்தனானா தந்தனானா, தந்தனானே தந்தனானா

                    - ஆவிக்குள்ளாகணுமே