ஆவியானவரே

உம் ஜனத்தை தேற்றிடும்

சோர்ந்து போனோமே

மனம் உடைந்து போனோமே

               தாயைப் போல தேற்றிடுமே

              இடுப்பில் வைத்து சுமந்திடுமே

               மடியில் வைத்து தாலாட்டியென்னை

          தோள்மேல் சுமந்து ஆற்றிடுமே!

 

வானபரியந்தம் எங்கள் பாவங்கள்

வளர்ந்து பெருகி உயர்ந்ததே

அதை உணர்ந்து வருந்துகின்றோம்

மனமுடைந்து வாடினோம்

உந்தன் அன்பின் இரக்கத்தினால்

எங்களை நீர் தேற்றிடும் - தாயைப் போல

 

காலையில் தோன்றும் பனியைபோல

எங்கள் பக்தி மறைகிறதே

ஆதி அன்பிற்குள் திரும்ப வருகிறோம்

எங்களை நீர் ஏற்றுக்கொள்ளும்

மனதுருக்கம் கொண்டவரே 

மார்போடு அணைத்து தேற்றிடுமே - தாயைப் போல

 

ஆவியானவரே

உம் ஜனத்தை தேற்றிடும்

சோர்ந்து போவதில்லையே

மனம் உடைவதில்லையே