உணர்வு உள்ள மனிதன் உண்டோ

 

 

 

உணர்வு உள்ள மனிதன் உண்டோ

            கர்த்தர் தேடுகின்றார்

            அவரைத் தேட, அண்டிக் கொள்ள

            உன்னை தேடுகின்றார்

            கர்த்தர் தேடுகின்றார்

            என் கர்த்தர் தேடுகின்றார்

 

பாவம் நீதி நியாயத்தீர்ப்பினை

கர்த்தர் கண்டித்து உணர்த்தும்போது

கருத்தாய் உணர்ந்து

கீழ்படிவோரையே

அவர் என்றும் தேடுகின்றார(2) - உணர்வுள்ள

 

வார்த்தையின் மூலம் பேசும் போது

கர்த்தர் சத்தத்திற்கு நடுநடுங்கி

உள்ளம் உடைந்து

செவிசாய்ப்போரையே

அவர் என்றும் தேடுகின்றார(2)  - உணர்வுள்ள

 

தேசத்தில் பாவம் பெருகும் போது

வந்திடும் அழிவை முன் உணர்ந்து

திறப்பிலே நின்று

பரிந்துபேசுவோரை

அவர் என்றும் தேடுகின்றார(2)  - உணர்வுள்ள