உந்தன் சிநேகிதர் எங்களின் நிமித்தம்
உம் சரீரத்தில் தழும்புகளை ஏற்றீரே
ஆராதிப்போம், ஆராதிப்போம், ஆராதிப்போம்
உம்மை ஆராதிப்போமே!
ஆட்டுக்குட்டியானவரே
அடிக்கப்பட்டீர் சிலுவையில் நீர்
அர்ப்பணித்து உம்மை என்றும்
அனுதினமும் ஆராதிப்போம் !
ஆராதிப்போம், ஆராதிப்போம், ஆராதிப்போம்
உம்மை ஆராதிப்போமே!
என் மீறுதல்கள் நிமித்தம் நீர் காயப்பட்டீரே
என் அக்கிரமங்கள் நிமித்தம் நீர் நொறுக்கப்பட்டீரே
என்மேல் வரும் தண்டனையை ஏற்றுகொண்டீரே
எனக்கு சமாதானம் என்றென்றும் அருளிச்செய்தரே - ஆராதிப்போம்!
என் பாடுகளை எல்லாம் நீர் ஏற்றுக்கொண்டீரே
என் துக்கங்கள் அனைத்தையும் சுமந்து தீர்த்தீரே
எந்தன் சரீரத்தை உந்தன் தழும்புகளால்
குணமாக்கி என்னை என்றும் வாழ்வித்தீரே - ஆராதிப்போம்!
என் சாபங்களை எல்லாம் நீர் நீக்கிவிட்டீரே
முள்முடியை உம்தலையில் தரித்துக் கொண்டீரே
நீர் எனக்காய் சாபமாகி சிலுவையில் தொங்கி
எந்தன் தலைமுறை சாபம்நீக்கி ஆசீர்வதித்தீரே- ஆராதிப்போம்!