உனக்கு பதில் செய்வேன்
உனக்கு நியாயம் செய்வேன்
துன்ப துயரமெல்லாம்
தூரமாய் நீங்கச்செய்வேன்
சோர்ந்து போகாதே
சோரம் போகாதே
நீ மறக்கப்படுவதில்லை
உன்னை மறந்துபோவதும் இல்;லை
கண்கலங்கிடாதே மகனே
உன்னை காத்திடுவேன் தினமே
கண்கலங்கிடாதே மகளே
உன்னை நடத்திடுவேன் தினமே - உனக்கு
முட்செடி போன்ற உந்தன்
வாழ்வை மாற்றியே
தேவதாரு விருட்சமாய்
மாற்றிடுவேனே(2)
உன்வெட்கத்திற்கு பதிலாக
இரட்டிப்பான நன்மைசெய்வேன்
உந்தன் சிறுமையெல்லாம் நீக்கி
உன்னை மகிழ்ந்திடநான் செய்வேன்.
- நீ மறக்கப்படுவதில்லை
ஒடுங்கிப் போன உந்தன்
ஆவியை மாற்றி
துதியின் ஆடையை நான்
உனக்கு தந்திடுவேன் (2)
நீதியின் விருட்சமாக உன்னை
ஓங்கி வளர்ந்திடச்செய்வேன்
தலைமுறை தலைமுறைக்கும்
உன்னைச் செழித்திடநான் செய்வேன்
-நீ மறக்கப்படுவதில்லை