உன்னதத்தின் பெலனே

 

 

உன்னதத்தின் பெலனே

பரிசுத்த ஆவியே

உம்மில் பெலன் அடைந்திட

அக்கினியை ஊற்றுமே

 

               என்னை நிரப்பிடும்

               என்னில் அமர்ந்திடும்

               பூமியின் எல்லைமட்டும்

               சாட்சியாய் வாழ்ந்திட - உன்னதத்தின்

 

அபிஷேக வார்த்தைகள்

பேசிடச் செய்யும்

மாந்தர்கள் மனம்திரும்பி

குணப்படச் செய்யும் -2

வரங்கள் கிருபைகள்

வெளிப்படச் செய்யும்

வியாதிகள் நிழல்பட்டு

விலகிடச் செய்யும்-2   - என்னை

 

சிறைச்சாலைக் கதவுகள்

திறந்திடச் செய்யும்

கட்டுண்ட ஜனங்களை

விடுவிக்கச் செய்யும-2

இடைவிடாமல்

ஜெபித்திடச் செய்யும்

உம்நாம மகிமைக்காய்

நின்றிடச் செய்யும்-2  - என்னை

 

உம்மண்டை ஜனங்களைச்

சேர்த்திடச் செய்யும்

உலகெங்கும் சபைகளை

நிறுவிடச் செய்யும்-2

எழுப்புதல் அக்கினியை

பரவிடச் செய்யும்

என்பணிவிடை ஓட்டத்தை

நிறைவேற்றிடச் செய்யும(2) -என்னை