உம் பிரசன்னம் வேண்டி நிற்கிறேன்

 

உம் பிரசன்னம் வேண்டி நிற்கிறேன்

உங்க முகத்தை நான் பார்க்கிறேன்

உங்க பிரசன்னத்தில் நான்வாழ்ந்திட

என்னையே தத்தம் செய்கிறேன்

 

 

               பரிசுத்தரே! தூயரே!

               தாகத்தோடு கேட்கின்றேன்

               என் உச்சிமுதல் பாதம்வரை

               உம்பிரசன்னததால் நிரப்பிடும(2)

 

 

கல்லான எந்தன் இதயத்தை

உம்பிரசன்னத்தால் உடைக்கின்றீர்

சதையான இதயமாய் மாற்றியே

உம்சித்தம் செய்ய வைக்கின்றீர்-பரிசுத்தரே

 

மண்ணான எந்தன் சாயலை

உம்பிரசன்னத்தால் உருமாற்றுகிறீர்

விண்ணவர் சாயலை எனக்குதந்து

உம்வாசனை வீசச்செய்கிறீர் -பரிசுத்தரே

 

கனவீன பாத்திரம் என்னையும்

உம்பிரசன்னத்தால் வனைகின்றீர்

பொன்னான பாத்திரமாக்கியே

உமக்காக பயன் படுத்துகிறீர்பரிசுத்தரே