உம்பாத சுவடைப் பின்பற்றியே
உம்மை நான் தொடர்ந்து பின்செல்லுவேன்
திரும்பி நானும் பார்த்திடேனே
பின்னோக்கி என்றும் நான் சென்றிடேனே
இலக்கை நோக்கி நான் ஓடிடுவேன்
இயேசுவே,இயேசுவே,இயேசுவே,இயேசுவே (2)
இயேசுவே,இயேசுவே!
கலப்பையின் மேல் கைவைத்தேன்
திரும்பி பாராமல் நான் பின்செல்வேன்
பரம ஈவை ருசித்த நான்
உம்மை நான் மறுதலியேன் - இயேசுவே
மேகம் போன்ற திரள் சாட்சிகள்
ஓட்டத்தை ஜெயத்தோடு முடித்தனரே
எனக்கு நியமித்த ஓட்டத்தில்
பொறுமையோடு ஓடிடுவேன் - திரும்பி
பந்தய சாலையில் ஓடுகிறேன்
நிச்சயமில்லாமல் ஓடேனே நான்
இச்சையடக்கத்தோடு ஓடிநான்
அழிவில்லா கிரீடம் பெறுவேன் - திரும்பி