உம்மாலே கூடாத காரியம்

ஒன்றுமே இல்லை இயேசுவே (2)

உம்மாலே எல்லாம் கூடும்

            நீர் சொன்னாலே எல்லாம் ஆகும்

            நீர் கட்டளையிட்டால் எல்லாம் நிற்கும்

                        உம்மால் கூடும(2)

                        உம்மால் முடியாதது ஒன்றுமில்ல.

 

கற்சாடி தண்ணீரை ரசமாக்கினீர்

கசந்த மாராவை மதுரமாக்கினீர்

என் குறைவை எல்லாம் நிறைவாக்குவீரே

என் வாழ்வை என்றும் சுவையாக்குவீர  - உம்மால் கூடுமே

 

செங்கடல் நடுவில் நீர் வழிதிறந்தீர்;

யோர்தானை குவியலாய் நிற்கச்செய்தீர்

என் தடைகள் எல்லாம் விலக்கிடுவீரே

என் பாதைகளை விசாலமாக்குவீரே - உம்மால் கூடுமே

 

 

மன்னாவை தினம்தந்து நீர்போஷித்தீர்

கன்மலையின் தண்ணீரால் தாகம்தீர்த்தீர்

என் தேவைகள் எல்லாம் என்றும் சந்திப்பீரே

எந்தன் சுகவாழ்வை துளிர்க்கச்செய்வீரே - உம்மால் கூடுமே