என்னில்-இருக்கும்-வரங்களை நான்

அனல் மூட்டி  எழுப்பிடவே

உந்தன் ஆவியின் வல்லமையினால்

நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமே

 

               ஆவியானவரே என்னை நிரப்பிடுமே

               கொழுந்து விட்டு நான் எரிய

               அனல் மூட்டி என்னை எழுப்பிடும(2)

 

 

ஞானத்தை போதிக்கும் வசனமும்

அறிவை உணர்த்திடும் வசனமும்

விசுவாச வரத்துடன் செயல்பட

என்ன  என்றென்றும் பயன்படுத்தும் - ஆவியானவரே

 

குணமாக்கும் வரமென்னில் செயல்பட

அற்புதங்கள் திரளாய் நடந்திட

தீர்க்கதரிசனம்   உரைத்திட

என்னை உமக்காக வனைந்திடுமே - ஆவியானவரே

 

ஆவிகளை   பகுத்தறிந்திட

அந்நிய மொழிகளை பேசிட

பாஷைகளை மொழி பெயர்த்திட

என்னை உபயோகப் படுத்திடுமேஆவியானவரே