என்னை வெட்கப்படுத்தலையே
தலைக் குனியவிடலையே
உயரத் தூக்கி
உயர்த்தினீரே
உன்னதங்கள் மட்டும்
கூட்டிச் சென்று
என்னை
உள்ளங்கையில் வைத்தென்;னை
மகிழச் செய்தீரே
நன்றி
சொல்லி – ஆ..ஆ..ஆ..ஆ
நன்றி
சொல்லி பாடிடுவேன்
நாள்
தோறும் துதித்திடுவேன்
நன்றி
ஐயா, நன்றி
ஐயா (3)
அடியேன் எனக்கு
காண்பித்த
தயவிற்கு
அடிமை நான்
என்றும் பாத்திரன்
அல்ல
இரண்டு பரிவாரங்களை
எனக்கு தந்தீரே
சொன்னதை எல்லாம்
நிறைவேற்றி
முடித்து
வைத்தீரே
-நன்றி ஐயா
இதுவரை என்னை
நீர் நடத்தி
வந்ததற்கு
நானும்
வீட்டாரும் எம்மாத்திரம்
வெகுதூர காலத்தின்
நன்மையான
செய்தியை
மனுஷரின் முறைமையாய்
எனக்கு சொன்னீரே
-நன்றி ஐயா
என்னால் ஏதும்
ஆகும் என்று நினைப்பதற்கு
தகுதி என்று
சொல்ல ஒன்றுமில்ல
உந்தன் தகுதியால்
என்னையும்
உயரச் செய்தீரே
உன்னதங்களில் என்னை
அமரச் செய்தீரே- நன்றி ஐயா