என்னோடு நீயிருந்தால்
உன்னோடு நானிருப்பேன்
என்னோடு நீ
நடந்தால்
உன்னோடு நான்
நடப்பேன்
உன்
தாயின் கருவினிலே
உன்னை
சுமந்தேனே
உன்
ஆயுள் முழுவதுமே
உன்னைத்
தாங்கிடுவேன்
- என்னோடு
பிறந்த நாள்
முதலாய்
உன்னை சுத்தம்
செய்து
உனக்காய் இரங்கிட
யாருமில்லையே
உன்னருகில் வந்தேன்
உன்னில் அன்புகூர்ந்தேன்
உன்னை என்றும்لل
பிழைக்க வைத்தேன்
உன்னை எனக்காக
தெரிந்து
கொண்டேன்
- என்னோடு
வளர்த்து ஆளாக்கி
உன்னை அலங்கரித்து
எந்தன் மணவாட்டியாக்கினேனே
என்னழகைத் தந்தேன்
என்சாயலை தரித்தேன்
உந்தன் கீர்த்தியை
பரவச் செய்தேன்
உன்னை மேன்மை
படுத்தினேன்
- என்னோடு