சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

 

சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே

சதாகாலமும் உயிரோடிருப்பவரே

சகலவற்றையும் சிருஷ்டித்தவரே

ஆராதனைக்கு பாத்திரே

 

               எங்கள் மேன்மைகளை

               உம்பாதத்தில் வைத்து

               ஓயாமல் உம்மை ஆராதிப்போம் (2)

               பரிசுத்தர் பரிசுத்தரே - நீரே

               பரிசுத்தர் பரிசுத்தரே (2)

               ஓயாமல் உம்மை ஆராதிப்போம்

               பாடியே உம்மை ஆராதிப்போம் (2)

 

நித்தியவாசியும் பரிசுத்தர் என்று

அழைக்கப்படுபவரே

நொறுங்குண்டு பணிந்த

ஆவியுள்ள எங்களிடம்

வாசம் செய்பவரே - எங்கள்

 

இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று

வாக்கு அளித்தவரே - நான்

உம(உந்தன்)ஜனமாகிய எங்கள்

உபத்திரவத்தைகண்டு

விடுதலை அளிப்பவரே - எங்கள்