நாங்கள் இயேசுவின் சந்ததி

 

 

நாங்கள் இயேசுவின் சந்ததி

தலைமுறைகள் தோறுமே

நேசர் இயேசுவை சேவிக்கும்

ஆசாரியர் கூட்டமே

 

            வானத்தின் நட்சத்திரம் நாங்களே

            வாக்குதத்தத்தின் ஜனங்களே

            பலுகிடுவோம் நாங்கள் பெருகிடுவோம்

            பூமியை நிரப்பிடுவோம்

            நாங்கள் பலுகிடுவோம் பெருகிடுவோம்

            பூமியை நிரப்பிடுவோம் - நாங்கள்

 

என்சபையைக் கட்டுவேன் என்றவர்

எங்களை அனுதினம் கட்டுவார்

பாதாள வல்லமைகள் ஒருபோதும்

எங்களை மேற்கொள்வதில்லையே - வானத்தின்

 

என் இயேசு ராஜாவின் கெம்பீரம்

எங்களின் நடுவில் இருக்கிறதே

எங்களின் பட்சத்தில் அவர் இருக்க

எதிரிகள் ஜெயங்கொள்வதில்லையே - வானத்தின்

 

என்மேல் விழுந்தால் நொறுக்கிடுவார்

எதிராய் எழும்பினால் நசுக்கிடுவார்

சபைகள் வளர்ந்து பெருகிடுமே

தேசம் எங்களால் நிறையுமே - வானத்தின்