நானென்று சொல்ல ஏதும  இல்லை

என்னாலே ஒன்றும் ஆவதுமில்லை

என் ஆதாரம் நீர்தான் ஐயா

ஒரு சேதாரம் அணுகாதையா

 

 

வாக்கினால் சொன்னதையெல்லாம்

உம் கரத்தினால் நிறைவேற்றினீரே

நான் பலப்படும் போது அதிகமாய் உம்மை

எந்நாளும் என்றும் சார்ந்துக்கொள்வேன்! -  என் ஆதாரம்

 

 

சிறுமையும் எளிமையுமான என்னை

இதுவரையில் தூக்கி சுமந்தீரே

என் மேன்மை பெருகும் போத  உந்தன்

கிருபையை என்றும் புகழ்ந்திடுவேன்! -  என் ஆதாரம்

 

 

கொஞ்ச பெலன் எனக்கிருந்தபோதும்

திறந்தவாசல  ீர் தந்தீரே

என் எல்லைகள் விசாலமாகும் போது 

தாழ்மையாய் என்றும்; வாழ்ந்திடுவேன்! - என் ஆதாரம்