நான் சிலுவையில் அறையுண்டேன்

இனி நானல்ல கிறிஸ்துவே

                             

                              நானல்ல நாதா நீர் மாத்திரமே

                              என் சுயமல்ல என்றும் நீர் மாத்திரமே

                              உம்மிலே என்னை மறைத்திடுவேன்

                            என்னிலே உம்மை காட்டிடுவேன்

 

பழைய மனுஷனை சிலுவையில் அறைந்தேன்

பாவ பழக்கத்தை முற்றிலும் ஒழித்தேன்

வெற்றியின் வாழ்வு நித்தமும் நான் வாழ

என்னை உம்முடன் சிலுவையில் அறைந்தேன(3) - நானல்ல

 

கோதுமை மணியாய் நித்தமும் மரித்திட

மிகுந்த பலனை உமக்காய் கொடுத்திட

எந்தனின் ஜீவனை சிநேகிக்காமல் வாழ

என்னை உம்முடன் சிலுவையில் அறைந்தேன(3) - நானல்ல

 

உந்தன் சரீர தழும்புகளை நான்

எந்தன்; சரீரத்தில் தரித்துக் கொண்டேன்

உந்தனின் அடிமை என்பதைக் காட்ட

என்னை உம்முடன் சிலுவையில் அறைந்தேன(3) – நானல்ல