பரலோக சாயலுக்கு
ஒத்த
பரிசுத்த ஆராதனை
செய்ய
உம் பாதம்
பணிகின்றோம்
பயபக்தியோடே ஐயா
இயேசுவே,
இயேசுவே(2)
உமக்கே
ஆராதனை
எங்களின்
பரிசுத்தரே
பரிசுத்தரே,
பரிசுத்தரே(2)
பரிசுத்தர்
பரிசுத்தரே
சுற்றும் கண்களால்
நிறைந்திருக்கும்
கேருபீன் தூதரோடு
ஆராதிப்போம்
மகிமையின் ஒளியில்
வாசம்செய்யும்
உம்மை மட்டும்
நாங்கள் ஆராதிப்போம் - இயேசுவே
சிறகுகள் அவ்வாறு
காணப்படும்
சேராபீன் தூதரோடு
ஆராதிப்போம்
உயரமும் உன்னதமுமானவரை
பரிசுத்தர் என்று
நாங்கள்ஆராதிப்போம் - இயேசுவே
சிங்காசனத்தை
சூழ்ந்திருக்கும்
தூதகர்ளோடு ஆராதிப்போம்
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவரை
சதா காலமும் ஆராதிப்போம் - இயேசுவே