புதிய காரியத்தை
கார்த்தர் செய்கிறார்
உன் வாழ்வில்
(2)
இன்றைக்கே அது இப்போதே
வந்து தோன்றிடும்
உன் அருகில்
முந்தினவைகளை நினைக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
(2)
புதிய காரியத்தை
கார்த்தர் செய்கிறார்
உன் வாழ்வில்
(2)
கடந்த காலத்தின்
தோல்விகளை
எண்ணி எண்ணி நீ
சோர்ந்திடாதே(2)
உன் காரியங்கள்
ஜெயமாகும்
தலை நிமிர உன்னை
செய்திடுவார்
(2) - புதிய
காரியத்தை
அடைக்கப்பட்ட உன் வாசல்களை
நினைத்து நினைத்து தினம் வருந்தாதே
(2)
வெண்கலக் கதவுகள்
உடைத்திடுவார்
ஒளிப்பிட புதையலை தந்திடுவார்
(2) - புதிய காரியத்தை
வாழ்க்கையில் இழந்த நன்மைகளை
பேசி பேசி தினம்
கலங்காதே
(2)
இரட்டிப்பு நன்மையை உனக்கு தந்து
இன்றே உன்னை உயர்த்திடுவார்
(2) - புதிய காரியத்தை