யாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?
கூடாதே, கூடாதே
யாராலும் கூடாதே
முடியாதே, முடியாதே
ஒருநாளும் முடியாதே
சின்னவனை ஆயிரமாக்கிடுவீர்
சிறியவன் பலத்த ஜாதியுமாவானே
ஏற்றக்காலத்தில் செய்பவரே
எங்கள் நாட்களில் செய்திடுமே
–கூடாதே,கூடாதே
ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே
பலத்திட செய்திடும் அற்புதரே
மந்தைப் பலுகிப் பெருகும்போல
எங்கள் ஜனங்களை பெருகச்செய்யும்
–கூடாதே,கூடாதே
அழித்திடும் ஆமான்கள்நடுவினிலே
துணைநின்று விடுவிக்கும் நல்லவரே
எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி
எங்களை நீர் பரவச்செய்வீர்
–கூடாதே,கூடாதே