ரூவா காற்றாக

 

ரூவா காற்றாக

இயேசுவின் சுவாசம்

எங்கள் மத்தியில் வீசுதே

அக்னி நெருப்பாக

ஆவியின் வல்லமை

எங்கள் மேலே இறங்குதே

 

               ஊற்றும் ஊற்றும் ஊற்றும்

               உங்க அபிஷேக அக்கினியை

               நிரப்பும் நிரப்பும் நிரப்பும்

               எங்கள் பாத்திரம் நிரம்பிவழிந்திட

 

கறைகள் எல்லாம் நீங்கிடுதே-உம்

வல்லமை எங்கள்மேல் இறங்குவதால்

குறைகள் எல்லாம் விலகிடுதே-நீர்

அக்கினி காற்றாய் வீசுவதால்

பாவத்தின் அழுக்கை கழுவியென்னை

கற்புள்ள கன்னிகையாய் மாற்றுகிறார் - ஊற்றும்

 

தடைகள் எல்லாம் விலகிடுதேநீர்

கீழ்காற்றாய் அசைவாடுவதால்

பாதைகள் எனக்காய் திறந்திடுதே-உம்

அபிஷேக காற்றின் வல்லமையால்

நுகத்தடிகளை முறித்து என்னை

விடுதலை அடைந்திட செய்கின்றார் - ஊற்றும்