வழிகளில் நீ நின்று

பூர்வ பாதைகளைக் கவனி

வேதம் காட்டும் நல்வழியில்

அனுதினம் நடப்பாயா?என்

 

 

ஜீவனின் வாசலும் இடுக்கமே

அதின் வழியோ நெருக்கமுமானதே

அதை கண்டுபிடிப்போர் ஒருசிலரே

அவர்களில் ஒருவனாய் இருந்திடு

உலகம் காட்டும் வழிகள் எல்லாம்

மரண வழிகள் என்றுணர்ந்து

நானே வழி என்றவரின்

பாதச்சுவடை பின்பற்று - வழிகளில்

 

 

உன்நெஞ்சின் வழிகளில் நடவாதே

கண்களின் காட்சியில் நீ மயங்காதே

அவனவன் வழிக்கு தக்கதாக

பலனளிக்க கர்த்தர் வருகிறார்

இடப்புறம் வலப்புறம் சாயும் போது

வழியிதுவே நீ பின்பற்று

நானே வழி என்றவரின்

பாதச்சுவடை பின்பற்று - வழிகளில்